விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

0பார்த்தது
போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். புதுப்பித்தல் மற்றும் தகுதி சான்று பிரிவுகளை பார்வையிட்ட அவர், மேலாண் இயக்குனர் குணசேகரனுடன் கழகத்தின் வரவு-செலவு மற்றும் தொழிலாளர் நலத்திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்தார். அனைத்து பிரிவுகளிலும் செலவினங்களை கணிசமாக குறைக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழாத வண்ணம் சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.