விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சியில் அமைந்துள்ள, ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று (ஜூன் 5) யாகங்கள் நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.