விழுப்புரம் அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை எம்எல்ஏ ஆய்வு

4பார்த்தது
விழுப்புரம் அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை எம்எல்ஏ ஆய்வு
விழுப்புரம் அருகே பனங்குப்பம் கிராமத்தில் ரூ. 6.62 கோடி மதிப்பில் மாவட்ட அருங்காட்சியகம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல்லை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே நாட்டினார். இந்நிலையில், விழுப்புரம் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆடிட்டோரியம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அருங்காட்சியகம் அமையும் என்றும், கடலூர் அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா அருங்காட்சியகத்தில் இடம் பெற உள்ள அம்சங்கள் குறித்து விளக்கினார். புதுச்சேரிக்கு அருகில் இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இங்கு வர வாய்ப்புள்ளதாக ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் தெரிவித்தார். பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என எம்எல்ஏ அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
Job Suitcase

Jobs near you