விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை வாக்குச்சாவடிகள் வாரியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஒரு வாக்கு கூட விடுபடக்கூடாது என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தி.மு.க.வினருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட விழுப்புரம், வானூர் தொகுதிகளில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. வாக்குச்சாவடி முகவர்களைக் கொண்டு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அவர் கே.கே. சாலை, கந்தசாமி லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பார்வையிட்டு, முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.