திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

1பார்த்தது
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோவனூர் கிராமத்தில் திமுக பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் கலந்துகொண்டு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டியது குறித்து வழிகாட்டினார். பாக முகவர்கள் வாக்காளர் சேர்க்கை, பிரசாரம் மற்றும் மக்களுடனான தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். விழுப்புரம் மற்றும் மானு தொகுதிகளில் திமுக வெற்றிக்காக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி