விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே வெள்ளம்புத்தூரைச் சேர்ந்த தமிழ்மொழி (25), வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கணவர் கார்த்திக்
வேலை காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தாமதித்ததால் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த அவர், கடந்த 18-ஆம் தேதி தனது 5 வயது மகன் பிரதீப்புடன் விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். நேற்று இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.