புரட்சி பாரதக் கட்சித் தலைவர் பூவை ஜகன் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். பீகார் தேர்தலில் பட்டியல் இனத்தவரும் இஸ்லாமியர்களும் பெருமளவில் பாஜகவிற்கு வாக்களித்துள்ளதாகவும், சிராஜ் பாஸ்வான் லோ ஜனசக்தி தொடர்ந்து பாஜகவுடன் பயணிப்பதாகவும் தெரிவித்தார். பீகாரில் பாஜக வெற்றி தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களிலும் எதிரொலிக்கும் என்றும், எஸ்.ஐ.ஆர். எனப்படும் தீவிர திருத்தப்பட்டியலில் உண்மையான வாக்காளர்கள் விடுபட மாட்டார்கள் என்றும், இந்தப் பணிக்கு ஒரு மாத காலமே போதுமானது என்றும் கூறினார். தமிழகத்தில் தலித் மக்களுக்கு திமுக அரசு நலன் செய்யவில்லை என்றும், மாறாக அடக்குமுறைகளையும் குண்டாஸ் உள்ளிட்ட வழக்குகளையும் போட்டு சிறையில் அடைத்து துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். வரும் 2026 ஆம் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும், ஜனவரி மாதத்தில் திமுக கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.