முஸ்லிம் மக்கள் கழக நிறுவனர் எஸ்.பி.யை சந்தித்தார்

324பார்த்தது
முஸ்லிம் மக்கள் கழக நிறுவனர் எஸ்.பி.யை சந்தித்தார்
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.வி. சாய் பிரனீத் அவர்களை, முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்டத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை, சமூக ஒற்றுமை மற்றும் பொதுநலன் குறித்து விவாதிக்கப்பட்டது. சமூக நல்லிணக்கம் பேணுதல் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த முயற்சிகளில் காவல்துறையுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி