விழுப்புரம் அருகே பாப்பனம்பட்டு பகுதியில், கும்பகோணத்திலிருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற ஈச்சர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளுக்காகக் கொட்டப்பட்டிருந்த ஜல்லி மேட்டின் மீது லாரி ஏறியதால் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் லாரியின் இன்ஜின் தனியாகக் கழன்றதுடன், அதிலிருந்த ₹9 லட்சம் மதிப்பிலான 900 பால்மாலின் எண்ணெய் பெட்டிகள் சாலையில் சிதறி சேதமடைந்தன. லாரி ஓட்டுநர் அரவிந்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விக்கிரவாண்டி போலீசார் கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீர்செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.