விழுப்புரம் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 12, 2025 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் திரு. ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள் தங்களது மனுக்களை இரட்டைப் பிரதிகளாக உரிய இணைப்புகளுடன் நவம்பர் 26, 2025க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அவர்களிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.