அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளராக இருந்த சி. வி. சண்முகம் நீக்கப்பட்டு, புதிய செயலாளராக இரா. பசுபதியை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். இந்த நியமனத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரா. பசுபதிக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேசமயம், சி. வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் திரண்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று இரா. பசுபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்திற்குச் செல்லாமல் அங்கிருந்து கடந்து சென்றனர்.