முருகன்கோவிலை அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர கோரி மனு

2பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தைதோப்பு தெருவில் உள்ள ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவிலை அன்பழகன் மற்றும் சக்திவேல் பூசாரி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவில் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும், வசூல் பணத்தையும் உண்டியல் வருமானத்தையும் இவர்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, கோவிலை மீட்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பொது கோவிலாக அறிவிக்கக் கோரி விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் இன்று மக்கள் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி