113 வாகனங்கள் வருகிற 12-ஆம் தேதிஏலத்தில்விட காவல்துறை முடிவு

4பார்த்தது
113 வாகனங்கள் வருகிற 12-ஆம் தேதிஏலத்தில்விட காவல்துறை முடிவு
விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் பதிவான 10 குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்ட 113 வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்படுகின்றன. இதில் 4 நான்கு சக்கர வாகனங்கள், 4 மூன்று சக்கர வாகனங்கள், 99 இரண்டு சக்கர வாகனங்கள் அடங்கும். இந்த ஏலம் பிப்ரவரி 12 அன்று காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. ஏல விதிமுறைகளின்படி, ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும். நான்கு/மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ. 5,000 மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2,000 முன்பணம் செலுத்த வேண்டும். ஏலம் எடுக்காதவர்களுக்கு முன்பணம் அன்றே திருப்பி அளிக்கப்படும். ஏலம் எடுத்தவர்கள் 7 நாட்களுக்குள் முழுத் தொகையைச் செலுத்தி வாகனத்தைப் பெற வேண்டும், இல்லையெனில் வாகனம் மறு ஏலத்திற்கு விடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி