விழுப்புரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சார்பில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையத்தில் சில திருநங்கைகள் வெளியூர் பயணிகளிடம் பணம் பறித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இரவு நேரங்களில் சுற்றித் திரிவது, பயணிகளிடம் பணம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. மேலும், சிறு தொழில்களில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அரசு வழங்கும் சிறு தொழில் கடன் உதவிகள் குறித்தும் விளக்கப்பட்டது. சுமார் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர்.