காவல்துறை சார்பில் வங்கிகளின் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

1பார்த்தது
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் IPS தலைமையில், இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வங்கி மேலாளர்களுக்கான பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், பணம் நிரப்பும் போது பாதுகாவலர்களை நியமித்தல், பண பரிவர்த்தனையின் போது எச்சரிக்கை கடைபிடித்தல் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. பெங்களூரு ஏடிஎம் கொள்ளை சம்பவத்தை எடுத்துக்காட்டாக கூறி, ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்து, சந்தேக நபர்கள் பற்றிய தகவலை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என எஸ்.பி. வலியுறுத்தினார். கூட்டத்தில் சுமார் 100 வங்கி மேலாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி