விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவில் திருவிழாவில் 70 வயது மூதாட்டி வள்ளியிடம் இருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த பெண் மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்டார். ஆனால், போலீசார் நகையை நீதிமன்றம் மூலம் பெறக் கூறினர். பின்னர், உரிய ஆதாரங்கள் ஏதுமின்றி வேறொரு பெண் போலீசாரின் உதவியுடன் நகையை பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வள்ளி கேட்டபோது, இன்ஸ்பெக்டர் அவமரியாதையாகப் பேசி நகையைத் தர மறுத்துள்ளார். இதனால், தனது நகையை மீட்டுத் தரக்கோரி மூதாட்டி வள்ளி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.