விழுப்புரம்: போலீஸ் அதிகாரி மீது பரபரப்பு புகார்

780பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயசிம்மன், தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கவும், காவல் துறையில் பணிபுரியும் சகோதரர் விஜயசிம்மன் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார். நிலப் பிரச்சனை காரணமாக சகோதரர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.