விழுப்புரம் மாவட்ட கேரம் சங்க மாணவர் V. பவன் குமார், 2025-2026 ஆம் ஆண்டுக்கான 50வது ஜூனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்று, அணிச் சாம்பியன்ஷிப் மற்றும் தனிநபர் ஜூனியர் ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். மொத்தம் இரண்டு தங்கப் பதக்கங்களையும் இரண்டு கோப்பைகளையும் வென்ற பவன் குமார், விழுப்புரம் திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சாதனைக்காக பொன்முடி அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.