விழுப்புரம்: சில்லறை கொடுக்காமல் அலைக்கழித்த பஸ் கண்டக்டர்

253பார்த்தது
விழுப்புரம்: சில்லறை கொடுக்காமல் அலைக்கழித்த பஸ் கண்டக்டர்
புதுச்சேரி அரியூரிலிருந்து கோலியனூர் செல்ல தனியார் பஸ்சில் ஏறிய சின்னப்பொண்ணு (40) கண்டக்டரிடம் ரூ. 500 கொடுத்து பயணச்சீட்டு கேட்டுள்ளார். கண்டக்டர் சில்லறை தராமல் அலைக்கழித்ததால், அப்பெண் விழுப்புரம் பஸ் நிலையம் வரை வர நேரிட்டது. அங்கு சில்லறை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, கண்டக்டர் தரக்குறைவாக திட்டியதால் மன உளைச்சலடைந்த பெண் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையை அடுத்து, கண்டக்டர் மன்னிப்பு கேட்டு மீதிப் பணமான ரூ. 450-ஐ திருப்பி அளித்தார்.

தொடர்புடைய செய்தி