விழுப்புரம் முத்தம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சித்தேரி கரை பகுதியில் ஏற்கனவே நகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு ஏரிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையப் பணி நடைபெற்று வருவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து மக்கள் மறியலைக் கைவிட்டனர். யுவராஜ் முத்தம்பாளையம் இது குறித்துப் பேசினார்.