விழுப்புரம் மாவட்டத்தில் மருந்து கடைகள் அடைத்து போராட்டம்

426பார்த்தது
ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்யவும், போலி மருந்து விற்பனையைத் தடுக்கவும் வலியுறுத்தி அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் அறிவித்துள்ள நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக விழுப்புரம் மாவட்டத்தில் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் முழுவதிலும் உள்ள 1,100 சில்லறை மருந்துக் கடைகளும், 150 மொத்த மருந்து விற்பனை நிலையங்களும் இன்று (மே 20)  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழுமையாக அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி