விக்கிரவாண்டி சார்பு பதிவாளர் அலுவலகத்தில் குடிநீர், இடவசதி, கழிவறை, வாகன நிறுத்துமிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மழைக்காலத்தால் சூழல் மேலும் மோசமடைந்துள்ளது. இதை வலியுறுத்தி, கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு, ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.