மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த கோரி மறியல்

0பார்த்தது
மாதாந்திர உதவித்தொகையை ரூ. 6 ஆயிரமாகவும், கடுமையான ஊனமுற்றோருக்கான உதவித்தொகையை ரூ. 10 ஆயிரமாகவும், படுக்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ. 15 ஆயிரமாகவும் உயர்த்தக் கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் முன் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்டச் செயலர் ஏ. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்க, மாவட்டத் தலைவர் ஜி. ஜெயக்குமார் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டதாக 216 பெண்கள் உள்பட 404 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி