விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், முதல்வர் தேர்தல் வாக்குறுதிப்படி ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யாமல், 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே தள்ளுபடி செய்ததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தலையில் முக்காடு போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.