விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல், உளுந்து, மணிலா உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வந்த விவசாயிகளுக்கு, கொள்முதல் விலை அறிவிக்கப்படாததாலும், அறிவிக்கப்பட்ட விலை குறைவாக இருந்ததாலும், அதிகாரிகள் சரியான விளக்கம் அளிக்காததாலும் ஆத்திரமடைந்தனர். இதனால், விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இணைய சேவை பாதிப்பால் தாமதம் ஏற்பட்டதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் விற்பனை கூடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.