புதுச்சேரி மது கடத்திய நபர் கைது: 144 மதுபாட்டில்கள் பறிமுதல்

305பார்த்தது
புதுச்சேரி மது கடத்திய நபர் கைது: 144 மதுபாட்டில்கள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் காந்திமதி தலைமையிலான போலீசார் அனிச்சங்குப்பம் சோதனை சாவடி அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, புதுச்சேரியிலிருந்து மதுபானம் கடத்தி வந்த செங்கல்பட்டைச் சேர்ந்த அருள்குமார் (35) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி. லி அளவுள்ள 144 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி