விழுப்புரம்: பொன்முடி மீதான குவாரி வழக்கு ஒத்திவைப்பு

84பார்த்தது
விழுப்புரம்: பொன்முடி மீதான குவாரி வழக்கு ஒத்திவைப்பு
விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில், கடந்த திமுக ஆட்சியின் போது, விதிமீறி செம்மண் எடுத்ததாக பொன்முடி எம்எல்ஏ, அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது 2012-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி மணிமொழி, விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி