செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரவுடி பட்டியலில் இடம் பெற்ற கதிரவன் (40), கடந்த 9-ஆம் தேதி இரவு விழுப்புரம் சென்னை சாலையில் உள்ள டீக்கடையில் அன்பு என்பவருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது உடன் இருந்த மேகநாதன் (44) என்பவர் கதிரவனைத் தட்டிக்கேட்டபோது வாக்குவாதம் முற்றியது. மேகநாதன் கிரைண்டர் குழவிக்கல்லை எடுத்து கதிரவனின் தலையில் போட்டதில், கதிரவன் படுகாயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கதிரவன் உயிரிழந்தார். விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் மேகநாதன் மற்றும் அன்புவை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.