விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், மாவட்டத்தின் மிகப்பெரிய பஸ் ஸ்டாண்ட் என்று கூறப்பட்டாலும், தற்போது பயணிகள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். பேருந்துகளில் ஏறவும் இறங்கவும் போதிய இடவசதி இல்லாததாலும், நடைபாதைகளில் அனுமதியின்றி கடைகள் அமைக்கப்பட்டதாலும் பயணிகள் செல்ல வழியின்றி தவிக்கின்றனர். மேலும், சில கடைக்காரர்கள் கழிவு நீரை வெளியே கொட்டுவதால் துர்நாற்றம் வீசி, நிற்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.