விழுப்புரம் அருகே 140 மதுபாட்டில்கள் கடத்தல்: வாலிபர் கைது.

0பார்த்தது
விழுப்புரம் அருகே 140 மதுபாட்டில்கள் கடத்தல்: வாலிபர் கைது.
விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் சிறுவந்தாடு சோதனைச் சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, புதுச்சேரியிலிருந்து இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 180 மி.லி அளவு கொண்ட 140 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் முரார்பாளையம் நடுத்தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (32) என்பவரைக் காவல் ஆய்வாளர் ஆனந்தி தலைமையிலான போலீஸார் கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி