விழுப்புரத்தில் போலிசாருக்கு எஸ்பி பாராட்டு

50பார்த்தது
விழுப்புரத்தில் போலிசாருக்கு எஸ்பி பாராட்டு
விழுப்புரம் பகுதிகளில் தொடர்ச்சியாக பைக் திருட்டில் ஈடுபட்ட சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, லாலாகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஜக்காரியா மகன் உமர் பரூக்கை (41) தனிப்படை போலீசார் திங்கள்கிழமை கைது செய்து, 14 பைக்குகளை பறிமுதல் செய்தனர். அதன்படி, தனிப்படை உதவி ஆய்வாளர் லியோ சார்லஸ், தலைமைக் காவலர்கள் பிரகாஷ்குமார், மகாராஜா, பாலமுருகன், முதல்நிலைக் காவலர்கள் சம்பத், குமரகுருபரன், நீலமேகம், சத்யன் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. பி. ப. சரவணன் நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.