விழுப்புரம் மாவட்டத்தில், நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு மற்றும் மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் பணியாற்றி வந்த 14 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 31 ஏட்டுகள் மற்றும் 36 காவலர்கள் என மொத்தம் 81 போலீசார் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணித் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவைச் சேர்ந்த பாலமுருகன், முருகன், கந்தசாமி உட்பட 11 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களும், மதுவிலக்கு சோதனைச்சாவடிகளைச் சேர்ந்த பார்த்திபன், அய்யனாரப்பன், அருள்தாஸ் ஆகிய 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களும் இந்த இடமாற்றப்பட்டவர்களில் அடங்குவர்.