காணை கிராமத்தில் பள்ளி முடித்து வரும் மாணவிகளிடம் கேலி செய்ததாக புகார் எழுந்த நிலையில், சீருடை இன்றி சென்ற காவலர் ராஜேந்திரன் சம்பவ இடத்தில் இரண்டு இளைஞர்களை பிடித்தார். அவர்களில் ஒரு இளைஞர் காவலரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்றார். விசாரணையில் அவர் விழுப்புரம் அரசு அறிஞர் அண்ணா கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் என தெரியவந்தது. பெற்றோரை அழைத்து எச்சரித்து மாணவர் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் வீடியோவாக பரவியுள்ளது.