தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, விழுப்புரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆன்லைன் மற்றும் கார்ப்பரேட் வர்த்தகத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி. சட்ட விதிகளைத் திருத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக ஏற்று நிறைவேற்றுபவர்களுக்கு மட்டுமே வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.