திருச்சி - விழுப்புரம் இடையே 140 கி. மீ வேகத்தில் சோதனைஓட்டம்

50பார்த்தது
திருச்சி - விழுப்புரம் இடையே 140 கி. மீ வேகத்தில் சோதனைஓட்டம்
திருச்சி - விழுப்புரம் இடையேயான ரயில் வழித்தடத்தில் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில், ரயில்களின் இயக்க வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு சுமார் 140 கி.மீ வேகத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. திருச்சியிலிருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்ட ரயில், ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம் வழியாக காலை 10.34 மணிக்கு விழுப்புரத்தை வந்தடைந்தது. வாளாடி - லால்குடி மற்றும் பூவனூர் - உளுந்தூர்பேட்டை இடையே அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்திலும், மற்ற பகுதிகளில் 130 கி.மீ வேகத்திலும் ரயில் இயக்கப்பட்டது. இந்த சோதனையின் போது சிக்னல் முறைகள் மற்றும் தண்டவாள ஸ்திரத்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி