விழுப்புரம் அருகே கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அருளாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று அன்னாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பசுபதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பின்னர் திருமேனிக்கு அன்னம் சாத்தி அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.