விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகள் மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில், உரிமையாளர்களால் அவிழ்த்துவிடப்படும் கால்நடைகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரிவதால் கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். முன்பு கால்நடைகளைப் பிடித்து அபராதம் விதித்து வந்த நகராட்சியும் போலீசாரும் தற்போது அலட்சியமாக இருப்பதால் இந்த நிலை நீடிப்பதாகக் கூறப்படுகிறது. பெரிய அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்குள் அதிகாரிகள் தலையிட்டு, சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.