நாடு முழுவதும் 72 ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூட்டுறவு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இன்று காலை மினி மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கொடி அசைத்து துவக்கி வைத்தார். விழுப்புரம் நகரப் பகுதியில் 5 கிலோமீட்டர் சுற்றிவந்த இந்த மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்ட கூட்டுறவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் ஆண்கள் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், முதல் நூறு பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.