புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகே தார் சாலை திடீரென 20 அடி நீளம், 6 அடி அகலம், 5 அடி ஆழம் வரை உள்வாங்கியது. அதிர்ஷ்டவசமாக, அப்போது அந்த வழியாக எந்த வாகனமும் செல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சில வாரங்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டு பின்னர் தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது காவல்துறையினர் இரும்பு தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை மாற்று வழியில் திருப்பிவிட்டுள்ளனர்.