விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் மயிலம் இடையே ரயில்வே இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று (மே 20) ஒலக்கூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் என்ஜின் எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், புதுச்சேரியில் இருந்து புது டெல்லி செல்லும் புவனேஸ்வர் அதிவிரைவு ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தடம் புரண்ட என்ஜினை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.