தமிழகத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியை நிறுத்தக் கோரி, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விழுப்புரம் நகராட்சி திடலில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் வடிவேல், குஷி மோகன், சுரேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்துகொண்டு, தேர்தல் ஆணையம் பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.