விழுப்புரம் மாவட்டம், வி. அகரம் பகுதியில் ராகுல் என்பவரது வீட்டை உடைத்து வெள்ளித் தட்டுகள் மற்றும் தங்கக் கம்பல்களைத் திருடிச் சென்றுள்ளனர். இந்த வழக்கில், வளவனூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு திருவள்ளூரைச் சேர்ந்த விக்கி (29) மற்றும் அரியலூரைச் சேர்ந்த பாலமுருகன் (48) ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகை, வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர்.