விழுப்புரம்: யூரியா தட்டுப்பாடு.. அதிகாரிகள் மீது புகார்

232பார்த்தது
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு யூரியா உரம் முறையாக வழங்கப்படவில்லை என அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் கலிவரதன் குற்றம் சாட்டியுள்ளார். மாவட்டத்திற்குத் தேவையான 5 ஆயிரம் டன்னில் வெறும் 500 டன் மட்டுமே வந்துள்ளதாகவும், அதை அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் கடுமையான உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி