வளவனுார்: பைக்கில் சென்ற கூலித் தொழிலாளி பலி

0பார்த்தது
வளவனுார்: பைக்கில் சென்ற கூலித் தொழிலாளி பலி
வளவனுார் அடுத்த வி.மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 47 வயது கூலித் தொழிலாளி செந்தில்குமார், கடந்த 20 ஆம் தேதி தனது பைக்கில் குமளம் நோக்கிச் சென்றபோது, முதலியார்குப்பம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி