விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன் தலைமையில் நடைபெற்ற ஏலத்தில், மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 113 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இதில் நான்கு சக்கர வாகனங்கள் 10, மூன்று சக்கர வாகனங்கள் 4, இரு சக்கர வாகனங்கள் 99 ஆகியவை அடங்கும். இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ. 23 லட்சத்து 32 ஆயிரத்து 200 வருவாய் ஈட்டப்பட்டு, அரசு கருவூலக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இது மாவட்ட காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளால் அரசுக்கு கிடைத்த வருவாயாகும்.