விழுப்புரத்தில் கஞ்சா போதையில் கத்தியுடன் ரகளை வீடியோ வைரல்

1பார்த்தது
நேற்றிரவு விழுப்புரம் பிள்ளையார் கோவில் தெரு, மருதூர் பகுதியில் கஞ்சா போதையில் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கத்தியுடன் இருசக்கர வாகனங்கள் மற்றும் வேன் கண்ணாடிகளை உடைத்ததாகவும், வீடியோ எடுத்தவரை தாக்கி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்த நகர காவல்துறையினர் வந்து, போதையில் இருந்த நபரை எச்சரித்து நாளை காவல் நிலையம் வருமாறு கூறி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலும், போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.