விழுப்புரம் தனலட்சுமி கார்டனில் உள்ள பல் மருத்துவமனை முன்பு கார் நிறுத்தியது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், திருவெண்ணைநல்லூர் கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகரனின் அண்ணன் ராஜா, மருத்துவமனை ஊழியர் மகேஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் முதலில் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறையிட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.