விழுப்புரம்: 10 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் விசாரணை

626பார்த்தது
விழுப்புரம்: 10 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் விசாரணை
விழுப்புரம் நகர காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் லியோ சார்லஸ் தலைமையிலான போலீசார் ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்த ஒரு பையை சோதனையிட்டதில், சுமார் 10 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கண்டறியப்பட்டன. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, அதனைப் போட்டுச் சென்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி