செஞ்சியைச் சேர்ந்த ராஜ்குமார் (30) என்பவர் புதுச்சேரியிலிருந்து இருசக்கர வாகனத்தில் 300 மதுபான பாட்டில்களை கடத்தி வந்தபோது, விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் அவரை மதுரபாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையின்போது கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபான பாட்டில்களும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து நடத்திய விசாரணையில், மதுபானம் விற்பனை செய்ததாக புதுச்சேரி திருக்கனூரைச் சேர்ந்த மதுக்கடை காசாளர் பாலமுருகன் (45) என்பவரும் கைது செய்யப்பட்டார். பிடிபட்ட இருவரையும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.