விழுப்புரம்: 500 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு

639பார்த்தது
விழுப்புரம்: 500 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி. சாத்தனூரில் வரலாற்று ஆய்வாளர் கோ. செங்குட்டுவன் கள ஆய்வில் 500 ஆண்டுகள் பழமையான (கி.பி. 15-16ஆம் நூற்றாண்டு) நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. விளைநிலத்தில் போரில் உயிர்நீத்த வீரனின் நடுகல், அவனது மனைவியின் சிற்பம், கழுவேற்றம் போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. அருகிலுள்ள ஐயனார் கோயில் வளாகத்திலும் வில், வாள், கேடயத்துடன் கூடிய இரு வீரர்களின் நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது இப்பகுதியின் வரலாற்றுப் பின்புலத்திற்கு முக்கியச் சான்றுகளாக அமைந்துள்ளன.

தொடர்புடைய செய்தி